search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வியாபாரிகள் கடை அடைப்பு"

    • மாணவனின் தாய் கொடுத்த புகாரையடுத்து, சக மாணவியின் தாய் சகாயராணி விக்டோரியாவை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
    • மாணவனின் பெற்றோரும் அரசு மருத்துவமனை மற்றும் போலீசார் மீது குற்றஞ்சாட்டியுள்ளனர்.

    காரைக்கால்:

    காரைக்கால் அருகே கோட்டுச்சேரி தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்த மாணவன் பாலமணிகண்டன், சக மாணவியுடன் கல்வியில் ஏற்பட்ட படிப்பு போட்டி காரணமாக, சக மாணவியின் தாயார், பாலமணிகண்டனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்தார்.

    மாணவனின் தாய் கொடுத்த புகாரையடுத்து,சக மாணவியின் தாய் சகாயராணி விக்டோரியாவை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

    மாணவன் பாலமணிகண்டன், அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும்போது, போலீசாரும், மருத்துவர்களும் அலட்சியமாக செயல்பட்டதால்தான், மாணவன் உயிரிழந்தான்.

    எனவே, போலீசார் மற்றும் மருத்துவர்கள் மீது துறைரீதியிலான் நடவடிக்கை எடுத்து தண்டிக்கப்படவேன்டும் என, காரைக்காலின் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். மாணவனின் பெற்றோரும் அரசு மருத்துவமனை மற்றும் போலீசார் மீது குற்றஞ்சாட்டியுள்ளனர்.

    மேலும், புதுச்சேரி சபாநாயகர் செல்வம், காரைக்கால் எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், நாகதியாகராஜன், பாஜக மாநில தலைவர் சாமிநாதன் உள்ளிட்ட பலர், பாலமணிகண்டன் குடும்பத்தினரை நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளனர்.

    இந்நிலையில், மாணவன் சிகிச்சை விசயத்தில் அலட்சியமாக செயல்பட்ட, டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்யவேண்டும். அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து தண்டிக்கவேண்டும். காரைக்கால் அரசு மருத்துவமனையில் சம்பளம் வாங்கிகொண்டு, சர்வீஸ் பிளேஸ்மெண்ட் என்ற பெயரில், புதுச்சேரி மற்றும் பிற இடங்களில் பணிபுரிவோரை உடனடியாக மருத்துவமனைக்கு திரும்ப நடவடிக்கை எடுக்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, காரைக்கால் போராளிகள் குழு, இன்று காரைக்காலில் முழு கடை அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.

    அதன்படி காரைக்கால் பாரதியார் சாலை, திருநள்ளாறு சாலை, மாதா கோவில் வீதி சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில் உள்ள அனைத்து கடைகளும் முழுமையாக மூடப்பட்டிருந்தது.

    இந்த போராட்டத்திற்கு, காரைக்கால் இந்துமுன்னணி, காரைக்கால், திருநள்ளாறு மற்றும் திரு.பட்டினம் வியாபாரிகள் சங்கம், ஆட்டோ, மினிடெம்போ சங்கத்தினர், ஓட்டல்கள், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்கள் சங்கம் மற்றும் அனைத்து கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    ×